அவலங்களின் உச்சகட்டமாகிப் போன பிக் பாஸ்!!

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், அனைவரின் வீடுகளிலும் பேசுகிற டாப்பிக் ஆகிவிட்ட பிக் பாஸ் கடந்த ஒரு வாரமாக பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. முந்தைய சீசன்களைவிட, அதிக அளவிலான விஷயங்கள் நடக்கப் பெறுவதாலோ என்னவோ இதன்மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வனிதா மாஸ் என்ட்ரி கொடுக்கிறேன் என்ற பெயரில் வீட்டை ரணகளமாக்கிவிட்டார், முகேன் முரட்டுத்தனமான கோபத்தை காட்டுவதும், சாண்டி கவினுக்கு ஆதரவளிக்கிறேன் என்ற பெயரில் தவறுகளுக்கு ஆதரவு அளிப்பதும், கவின்
 
அவலங்களின் உச்சகட்டமாகிப் போன பிக் பாஸ்!!

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், அனைவரின் வீடுகளிலும்  பேசுகிற டாப்பிக் ஆகிவிட்ட பிக் பாஸ் கடந்த ஒரு வாரமாக பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

முந்தைய சீசன்களைவிட, அதிக அளவிலான விஷயங்கள் நடக்கப் பெறுவதாலோ என்னவோ இதன்மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

அவலங்களின் உச்சகட்டமாகிப் போன பிக் பாஸ்!!

வனிதா மாஸ் என்ட்ரி கொடுக்கிறேன் என்ற பெயரில் வீட்டை ரணகளமாக்கிவிட்டார்,  முகேன் முரட்டுத்தனமான கோபத்தை காட்டுவதும், சாண்டி கவினுக்கு ஆதரவளிக்கிறேன் என்ற பெயரில் தவறுகளுக்கு ஆதரவு அளிப்பதும், கவின் வாயிலேயே சொல்லிவிட முடியாதபடி சேரன் மற்றும் கஸ்தூரியை வயது வித்தியாசமில்லாமல் கிண்டல் செய்வதும் மேலும் ரெட் கார்டு கொடுக்கும் அளவு மிக மோசமாக நடந்துகொள்வதும், தர்சன் தன்னுடைய உண்மையான முகத்தை வெளிப்படுத்தியதும், லோஸ்லியா சேரனை கண்டுகொள்ளாமல் கவின்- சாண்டி கூட்டணியில் இருந்துகொண்டு அனைவரையும் நக்கல் செய்வதும், நடித்துக் கொண்டிருந்த அப்பாவித்தனமான முகத்தை மறந்து சண்டைக் காரியானதும் பலருக்கு பேரதிர்ச்சியாகவே உள்ளது.

வாரம் முழுவதும் இவர்களது ஆட்டத்தை சகிக்க முடியாமல் இருந்த மக்களுக்கு விடிவுகாலம்தான் இந்த வார இறுதி, நேற்றைய நிகழ்ச்சியில் மதுமிதா வெளியேற்றத்தால் சரிவர இன்னும் கேள்விகள் கேட்டு முடிக்கப்படவில்லை. இன்று வெளுத்துவாங்குவார் கமல் ஹாசன் என்று பலரும் காத்துள்ளனர்.

From around the web