பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறர் ஜெயம் ரவி: என்ன காரணம் தெரியுமா?

 

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர் ஜெயம் ரவி அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் ஜெயம் ரவியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் துவங்க உள்ளன 

bhoomi

முதல் கட்டமாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதன் விளம்பரங்கள் வர உள்ளன. அதனை அடுத்து அடுத்த வாரத்தில் ஒருநாள் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜெயம்ரவி செல்ல இருப்பதாகவும் அதற்காக அவர் இன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி பூமி படத்தின் புரமோஷன் பணிக்காக எப்போது செல்லவுள்ளார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web