சாண்டிக்கு பிக் பாஸ் வழங்கிய அறிவுரை!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கால் அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் கூடையில் பந்து போடுதல் டாஸ்க்கில், லோஸ்லியாவிற்கு அடிபட்டது. அதாவது முகின் கூடையிலிருந்து லாஸ்லியாவும் சாண்டியும் பந்து எடுக்கையில் அவருக்கு அடிபட்டது. இதனால் கோபமான கவின் சாண்டியிடம் சண்டையிட்டார். அப்போது மன்னிப்பு கேட்டார் சாண்டி. இருப்பினும் கவின் சாண்டியிடம் பேசவில்லை. இதன்பின்னர் சாண்டி பிக் பாஸிடம் இதுகுறித்து பேசினார். அப்போது, மனம் குமுறி அழுதார்
 
சாண்டிக்கு பிக் பாஸ் வழங்கிய அறிவுரை!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது  இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கால் அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்று முன் தினம் கூடையில் பந்து போடுதல் டாஸ்க்கில், லோஸ்லியாவிற்கு அடிபட்டது. அதாவது முகின் கூடையிலிருந்து லாஸ்லியாவும் சாண்டியும் பந்து எடுக்கையில் அவருக்கு அடிபட்டது.

இதனால் கோபமான கவின் சாண்டியிடம் சண்டையிட்டார். அப்போது மன்னிப்பு கேட்டார் சாண்டி. இருப்பினும் கவின் சாண்டியிடம் பேசவில்லை.

சாண்டிக்கு பிக் பாஸ் வழங்கிய அறிவுரை!!

இதன்பின்னர் சாண்டி பிக் பாஸிடம் இதுகுறித்து பேசினார். அப்போது, மனம் குமுறி அழுதார் சாண்டி, மேலும் என்னால் இங்கு இருக்க முடியவில்லை. என்னை வீட்டைவிட்டு அனுப்புங்கள் என்று கூறினார்.

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் போட்டியை விளையாடுகிறார்கள். நீங்களும் போட்டியை விளையாடுங்கள்” என்றார் மேலும் கவினிடம் பேசுங்கள். இப்போது இல்லை என்றால் சிறிது நேரத்திற்கு பிறகு பேசுங்கள். அவர் உங்களது நண்பர்” என்று அறிவுரை வழங்கினார் பிக் பாஸ்.

இதன்பின்னர் சாண்டி இதுகுறித்து தர்சனிடம் கூறினார், அடுத்து சேரனிடம் கூற, அவரும் கவினிடம் தனியாக பேசுங்கள் என அறிவுரை வழங்கினார்.

From around the web