மோகன் வைத்தியாவின் நெஞ்சம் உருக்கும் கதையால் கதறி அழுத பிக்பாஸ் குடும்பம்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி மிக விறுவிறுப்பாக 3 வது நாள் சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் உள்ளே போன முதல் நாள் மட்டுமே சண்டை இல்லாமல் கலகலப்பாக இருந்தனர். 3வது நாள் எப்பிசோடில் முதலில் மீராமிதுன் அபிராமி ஆகியோரிடையே சண்டை வந்தது, அதனைப் பஞ்சாயத்துப் பண்ண சென்ற வனிதா, மீரா மிதுனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் கூற வேண்டியிருந்தது, அதில் மோகன் வைத்தியா
 

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி மிக விறுவிறுப்பாக 3 வது நாள் சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் உள்ளே போன முதல் நாள் மட்டுமே சண்டை இல்லாமல் கலகலப்பாக இருந்தனர்.

3வது நாள் எப்பிசோடில் முதலில் மீராமிதுன் அபிராமி ஆகியோரிடையே சண்டை வந்தது, அதனைப் பஞ்சாயத்துப் பண்ண சென்ற வனிதா, மீரா மிதுனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மோகன் வைத்தியாவின் நெஞ்சம் உருக்கும் கதையால் கதறி அழுத பிக்பாஸ் குடும்பம்

அதன் பின்னர் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் கூற வேண்டியிருந்தது, அதில் மோகன் வைத்தியா  அவர் வாழ்வில் நடந்த சோகங்களைப் பற்றிக் கூறினார். தனது காது கேட்காத, வாய் பேச முடியாத மனைவியின் இறப்பு குறித்து விவரிக்கையில் சகபோட்டியாளர்கள் அழத்துவங்கி விட்டனர்.

அவருடைய மகனும் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தை என்பது பற்றியும், தாய் தந்தை இழப்பு பற்றியும் , தன்னுடைய தனிமையான வாழ்க்கை பற்றியும் கூறுகையில் பார்த்த மக்களுக்கு நெஞ்சமே கனத்துவிட்டது.

பிக்பாஸ் போட்டி முடிவடைந்த பின்னும் அனைவரும் தன்னுடனான நட்பினை தொடரும்படி வேண்டுகோள் விடுக்கையில், மனது உடையும் அளவு உருக்கமாய் இருந்தது.

இதனைக் கேட்ட அனைவரும் கதறி அழுததோடு ஆறுதல் கூறினர்,  பின்னர் தன்னை நீண்ட நேரம் சிரிக்க வைத்ததற்கு சாண்டிக்கு மோகன் வைத்யா நன்றி சொன்னார். இந்த அளவு வாழ்க்கையில் சிரித்ததில்லை என்றும் கூறினார். அவருக்கு ரசிகர்கள் வெளியில் இருந்தபடி ஆதரவு தெரிவித்து வருவதுடன் ஆறுதல் கூறியுள்ளனர்.

From around the web