பகலில் ‘பிக்பாஸ்’, இரவில் ‘விக்ரம்’: கமல் கொடுத்த 32 நாட்கள்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் கமலஹாசன் அந்த நிகழ்ச்சி முடியும்வரை திரைப்படங்களின் படப்பிடிப்புகள் செல்லமாட்டார் என்று கூறப்பட்டது. இதனால்தான் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கூட ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது

ஆனால் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட கமல் ஹாசன் அந்த படத்தில் நடிப்பதற்காக 32 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் ஷூட்டிங் இருந்தாலும் பகலில் பிக்பாஸ் இரவில் விக்ரம் படத்தில் பணிபுரிய கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது 

மேலும் முழுக்க முழுக்க விக்ரம் திரைப்படம் இரவில் எடுக்கப்பட இருப்பதால் இந்தத் திரைப்படத்திற்காக இரவு நேரங்களில் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. 32 நாட்களில் கமல்ஹாசன் குறித்த காட்சிகளின் படப்பிடிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்து விடுவார் என்றும் அதன் பின்னர் 15 நாட்களில் மீதி உள்ள காட்சிகளை முடித்து விட்டு ஒட்டுமொத்த படத்தையும் இரண்டு மாதங்களில் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது 

வரும் தேர்தலுக்குள் இந்தத் திரைப்படம் வெளிவர வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

From around the web