மீண்டும் இணைந்த பிக்பாஸ் 3 போட்டியாளர்கள்!

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மூவர் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் கடந்த சீசனில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரியதாக பேசியதால் திடீரென வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் காரணமாக சாண்டி, கவின் உள்பட பலர் மிகுந்த வருத்தம் அடைந்தனர். சித்தப்பா சித்தப்பா என்று சரவணனை சுற்றி சுற்றி அவர்கள் வந்தனர் என்பதும், அவர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் மூவர் இணைந்துள்ளன, சரவணன் மற்றும் ரேஷ்மா நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடன இயக்குனராக சாண்டி பணிபுரிகிறார்.

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

சமீபத்தில் படப்பிடிப்பில் மூவரும் ஒரே செட்டில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை தற்போது ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் நாங்கள் மீண்டும் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி என்றும் இந்த படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகுந்த சந்தோசம் என்றும் ரேஷ்மா கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் வெகு விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் ரேஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

From around the web