இறந்த பின்னரும் சித்ராவிற்கு பேனர் வைத்த ரசிகர்கள்!!!

அவர் இறந்த பிறகும் பேனரா, இப்படிபட்ட ரசிகர்களா அவருக்கு என பாராட்டி வருகிறார்கள்.

 

கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் பெரிய அளவில் பாராட்டப்பட்டவர் இவர்.

அந்த சீரியலை இவருக்காகவே பார்க்கும் பல இளைஞர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம். மிகவும் தைரியமான பெண்ணான இவர் திடீரென தற்கொலை செய்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் படு ஷாக்.

அவரது கணவர் ஹேமந்த் கொடுமையால் தான் சித்ரா தற்கொலை முடிவு எடுத்தார் என்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை சித்ரா மிகவும் ஆசையாக நடித்த தனது முதல் படமான கால்ஸ் திரைப்படத்தை பார்க்காமலேயே சென்றுவிட்டார். அப்படம் வரும் பிப்ரவரி 26ம் தேதி வெளியாவுள்ளது. இதனால் சித்ரா ரசிகர்கள் ரிலீஸிற்காக பேனர் எல்லாம் வைத்துள்ளனர். அவர் இறந்த பிறகும் பேனரா, இப்படிபட்ட ரசிகர்களா அவருக்கு என பாராட்டி வருகிறார்கள்.

From around the web