வெற்றிமாறன் படத்தில் இருந்து விலகிய பாரதிராஜா: என்ன காரணம்?

 

’அசுரன்’ படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து பாரதிராஜா விலகி இருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

’அசுரன்’ படத்தை அடுத்து சூரி கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

vetrimaran

ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையப்படுத்தி தயாராகி வரும் இந்தப் படத்தில் மிக முக்கிய கேரக்டரில் பாரதிராஜா நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டர் தான் இந்த படத்தின் முதுகெலும்பு என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென பாரதிராஜா இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் உடல்நிலை காரணமாக அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாரதிராஜா நடிக்க வேண்டிய கேரக்டரில் கிஷோர் நடிக்க உள்ளதாக தெரிகிறது

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பதும், வெற்றிமாறன் படத்திற்கு இளையராஜா இசை அமைப்பது இதுதான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web