விபிஎப் கட்டணத்தை ஏற்ற கியூபை கலாய்த்த பாரதிராஜா!

 

தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள விபிஎப் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இன்று திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திடீரென க்யூப் நிறுவனம் விபிஎப் கட்டணத்தை இந்த மாதம் முழுவதும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது இருதரப்புமே எதிர்பாராத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் க்யூப் நிறுவனம் விபிஎப் கட்டணத்தை ஏற்றுள்ள ஏற்றுள்ளது குறித்து ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது’ என கலாய்த்து அறிக்கை ஒன்றை பாரதிராஜா வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:

theatre

திரைப் படங்கள் தயாரிப்பதே வெளியிடுவதற்குதான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்களின் நலனுக்குத்தான். விபிஎப் சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத’ கதையாக டிஜிட்டல் புரஜொக்சன் நிறுவனங்கள் திடீரென தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு விபிஎப் கட்டணம் இல்லை என அறிவித்திருக்கிறது. நல்லது

திரையரங்குகள் உடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவிவரும் நிலையில் தயாரிப்பாளர்களையோ, திரையரங்க உரிமையாளர்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியை டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎப் கட்டணத்தை விலக்கி இருந்தாலும் அது இரண்டு வாரங்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி விபிஎப் கட்டணமில்லாத இந்த இரண்டு வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம்

அதேசமயம் விபிஎப் கட்டி திரைப்படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதில் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி’ 

இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது

bharathiraja

From around the web