வில்லனாக மாறினார் நடிகர் ஜெய்: யார் ஹீரோ தெரியுமா?

 

சுப்ரமணியபுரம், ராஜா ராணி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த ஜெய் அதன் பின்னர் சரியான கதையை தேர்வு செய்யாததால் தற்போது வாய்ப்புகள் இன்றி இருக்கிறார். அவருக்கு தற்போது ஒரே நம்பிக்கை சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் என்பதும், அந்த படம் வெளியானால் தனக்கு நல்ல மார்க்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் வில்லனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் படத்தை பத்ரி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சமீபத்தில் சுந்தர் சி தயாரிப்பில் நேரடியாக சன் டிவியில் வெளியான நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது 

jai

இந்த நிலையில் பத்ரியின் புதிய படத்தில் சுந்தர் கதாநாயகனாகவும் ஜெய் வில்லனாகவும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வி அடைந்ததால் தற்போது வில்லன் வேடத்தில் நடிக்க ஜெய் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது

இந்த படம் வெற்றி பெற்றால் அவர் தொடர்ந்து வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  சுந்தர்சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு 2 என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய் தற்போது அவருடைய படத்தில் வில்லனாக நடிக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web