மனைவியுடன் இயக்குனர் அட்லி கிறிஸ்துமஸ் கொண்டாடும் அழகிய புகைப்படங்கள்!

 

இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள திரை நட்சத்திரங்களும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் என்பதும் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இன்றைய சமூக வலைதள பக்கங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை குறித்த வாழ்த்துக்கள் தான் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளது என்பதும் உச்ச நட்சத்திரங்கள் முறை துணை நட்சத்திரங்கள் வரை அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் 

atlee

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் இயக்குனர் அட்லி இந்த வருடமும் மிகச் சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தில் மனைவி ப்ரியா அட்லியுடன் இருக்கும் புகைப்படத்தை அட்லி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வெளிநாட்டில் எடுத்தது போல் இருக்கிறது என்பதால் அவர்கள் இருவரும் வெளிநாட்டில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது குறித்த புகைப்படங்களை ப்ரியா அட்லியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படத்திற்கு ஒரு மணி நேரத்தில் சுமார் 40 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web