பாதுகாப்பாக இருங்கள்; புத்திசாலிதனமாக இருங்கள்; நடிகையின் நடிகையின் ட்விட்டர் பக்கம்!

பாதுகாப்பாக இருங்கள்; புத்திசாலித்தனமாக இருங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார் நடிகை ஜனனி!
 
janani

தனது நடிப்பாலும் தனது அழகாலும் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளனர் நடிகை ஜனனி. இவர் நடிப்பில் வெளியான அவன் இவன்  திரைப்படம் மக்களுக்கு நல்லதொரு சந்தோஷத்தை அளித்தது மட்டுமின்றி இவருக்கும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான  தெகிடி என்ற திரைப்படம்  இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன்பின்னர் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான பலூன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.janani

மேலும் இவர் மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் பிக் பாஸ் சீசன் 2 பைனல் லிஸ்ட் ஆக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இறுதியில் அவர் தோல்வியை தழுவினார். ஆனால் மக்கள் மனதில் மிகுந்த வெற்றி பெற்றார் என்பது தவிர்க்க முடியாத உண்மையாக தற்போது வலம் வருகிறது. இத்தகைய அழகையும் பெற்றுள்ள நடிகை ஜனனி தனது பக்கத்தில் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

அதன்படி அவர்,"இறுதியில், COVID-19 மனிதகுலத்தை கற்பிக்கக்கூடிய மிகப் பெரிய பாடம் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம், எனவே சிறந்த நேரங்கள் முன்னால் இருப்பதால், அங்கேயே தொங்குங்கள்! பாதுகாப்பாக இருங்கள், புத்திசாலித்தனமாக இருங்கள் மற்றும் மிக முக்கியமாக தயவுசெய்து" இவ்வாறு கூறியுள்ளார் மேலும் அவரின் ட்விட்டிற்கு கருத்துக்களும் லைக்ஸ்களும் வந்த வண்ணமாக உள்ளது.

From around the web