மறுபடியும் முதலிடம் பாலாஜிக்கா? இடையில் கேபி செய்த சேட்டை!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் நேரடியாக தகுதி பெற அனைத்து போட்டியாளர்களும் தீவிர முயற்சியில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

நேற்று நடைபெற்ற இரண்டு டாஸ்குகளிலும் ரியோ அதிக புள்ளிகள் பெற்று உள்ளார் என்பதும் ரம்யா இரண்டாவது இடத்திலும் பாலாஜி மற்றும் ஆரி மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

task

இந்த நிலையில் இன்றும் இதே டாஸ்க் தொடர்கிறது, இன்றைய டாஸ்க்கில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை கணிக்க முடியாத நிலையில் தான் வெற்றி பெற்றதாக தனக்கு தானே அறிவித்துக் கொண்டு கேபி பாட்டு பாடி சேட்டை செய்தது பாலாஜியை கடும் வெறுப்புக்கு உள்ளாக்கியது. யார் வெற்றி பெற்றது என ஒரு முடிவை எடுக்கும் முன்னர் அடுத்த சுற்றுக்கு செல்லாதே என பாலாஜி கூறியபோதும், அதனை கண்டுகொள்ளாமல் அடுத்த சுற்றுக்கு செல்ல கேபி தயாரானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இருப்பினும் இன்று நடந்த மூன்றாவது சுற்றில் பாலாஜி தான் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்பது மதிப்பெண் பட்டியலின் போர்டில் இருந்து தெரியவருகிறது. ஏற்கனவே பாலாஜி 9 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் இன்று 3-வது சுற்றில் ஏழு புள்ளிகளை பெற்றதால் 16 புள்ளிகள் பெற்று அவர் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web