பிக்பாஸ் கோர்ட்டில் பாலாஜி-சனம்: நீதிபதி சுசியின் தீர்ப்பு என்ன?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நீதிமன்ற டாஸ்க் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பாலாஜி மீது சனம்ஷெட்டியும், சனம்ஷெட்டி மீது பாலாஜியும் வழக்கு தொடர்கின்றனர். இந்த வழக்கை சுசித்ரா நீதிபதியாக இருந்து விசாரணை செய்து வருகிறது வருகிறார். இதில் யார் குற்றவாளி என்பதை நீதிபதி சுசித்ரா தீர்ப்பளிக்கும் காட்சிகள் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

ஏற்கனவே பாலாஜி மற்றும் சனம் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாகவே மோதி வருகின்றனர் குறிப்பாக நேற்று இருவருக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நீதிமன்றத்தை இருவரும் பயன்படுத்தி ஒருவர் மீது ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்

இந்த பிக்பாஸ் நீதிமன்றத்தில் வேறு யார் யார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது, அந்த வழக்குகளின் முடிவுகள் என்ன என்பது குறித்து இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இன்றைய முதல் புரோமோவே அட்டகாசமாக சூடுபிடிக்கும் வகையில் இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


 

From around the web