பாலாஜி, ரம்யா பாட்டுப்பாடி ஆட்டம் போட, ஆரி முறைக்கும் வீடியோ வைரல்!

 

பிக் பாஸ் வீட்டில் ஆரி ஒரு தனி அணியாகவும், ஆரிக்கு எதிரான ஆறு பேர்களும் ஒரு தனி அணியாகவும் இருப்பது போல் தற்போதைய நிலை தெரிய வருகிறது. இருப்பினும் ஆரி அனைவருக்கும் சவால் விடும் வகையில் நடந்து வருகிறார் என்பதும் ஆரியை ஆறு பேரும் சேர்ந்தும் கூட அசைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான அந்த வீடியோவில் பாலாஜி மற்றும் ரம்யா ஆகிய இருவரும் பாட்டுப்பாடி ஆட்டம் போட அதை ஆரி முறைத்து பார்ப்பது போல் உள்ளது. இருவரும் பாடும் பாடலில் தங்களுக்கு கவலை இல்லை என்றும், பிக்பாஸ் எளிதான போட்டி இல்லை என்றும், நல்லவங்க கெட்டவங்க யாரும் இல்லை என்றும், அது அவரவர் பார்வையில் தான் இருப்பதாகவும் பாடுகின்றனர்.

balaji

பாலாஜி, ரம்யா ஆகிய இருவரும் ஆட்டம் போட்டு பாட்டு பாடுவதை ஷிவானி உள்பட மற்ற போட்டியாளர்கள் உற்சாகத்துடன் ரசித்து வரும் நிலையில் ஆரி மட்டும் முறைத்து பார்க்கும் காட்சி உள்ளது. மீண்டும் விஜய் டிவி ஆரியை தவறாக காண்பிப்பதாக விமர்சனம் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


 

From around the web