இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பாலாஜி? கோட்டைவிட்ட ஆரி!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு பாலாஜி தகுதி பெற்றுவிட்டது போலவும், ஆரி இந்த போட்டியில் கோட்டை விட்டது போலவும் வெளியாகியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பைனலுக்கு நேரடியாக தகுதி பெறும் ஒரு போட்டியாளர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். கடினமான டாஸ்க் மூலம் தேர்வு செய்யப்படும் இந்த டாஸ்கின் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது

bala rio

இதில் ஆரி, சோம், ஷிவானி, ரம்யா, கேபி, ஆகிய அனைவரும் அவுட்டாகி விட ரியோ மற்றும் பாலாஜி ஆகிய இருவர் மட்டும் தாக்குப்பிடித்து நிற்கின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் ரியோ சற்று தடுமாறியது போலவும் பாலாஜி இந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாகவே தெரிகிறது. இருப்பினும் இதனை உறுதி செய்ய இன்றைய நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தால்தான் தெரியும் 

இந்த போட்டியில் ஆரி நேரடியாக தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கோட்டைவிட்டது ஆரி ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். இருப்பினும் அவர் மக்களின் வாக்குகளால் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறுவார் என்பது மட்டுமின்றி டைட்டிலை வின் பண்ணுவார் என்று அவருடைய ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

From around the web