அட ஆச்சரியமா இருக்கே, ஆரியை பாராட்டுகிறார் பாலாஜி!

 

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஆரியும் பாலாஜியும் எலியும் பூனையும் போல் தினமும் சண்டை போட்டு வருகிறார்கள் என்பது தெரிந்ததே. கமல்ஹாசனின் அறிவுரைக்கு பின்னும் ஆரியிடம் பாலாஜி தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார் என்பதும் டாஸ்க்கிலும் இந்த சண்டை எதிரொலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று திடீரென ஆரியை பாலாஜி பாராட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதிலும் டாஸ்க்கில் ஆரியை அவர் பாராட்டியுள்ளது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் ’டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கியம் கொடுக்கப்பட்டு அந்த வாக்கியம் யாருக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதை விளக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அந்த வகையில் ’துன்பம் மறந்துவாழ்’ என்ற வாக்கியம் பாலாஜிக்கு வருகிறது. அந்த வாக்கியம் குறித்து விளக்கமளித்த பாலாஜி ’ஆரிக்கு தான் இந்த வார்த்தையை நான் சொல்வேன் என்றும் ஆரியின் விளையாட்டு முறையில் எனக்கு வேறுபாடு இருந்தாலும் அவர் எந்த துன்பம் வந்தாலும் அதை உடனே மறந்து விடுவார் என்றும் குறிப்பாக என்னுடன் சண்டை போட்டதை அவர் மறந்து உடனே பேசி விடுவார் என்றும் அதனால் அவருக்கு தான் இந்த வார்த்தையை சரியாக பொருந்தும் என்றும் கூறி பாராட்டு தெரிவித்தார்

ramya vs aari

ஆரியை பாலாஜி பாராட்டினாலும் ரம்யா தொடர்ந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். அவருக்கு ’தேசத்தோடு ஒட்டி வாழ்’ என்ற வாக்கியம் வந்தது. இந்த வாக்கியம் குறித்து கருத்து கூறிய ரம்யா இந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேர்களுடனும் கருத்து வேறுபாடுகளுடன் ஆரி இருக்கிறார் அப்படி ஒருவேளை கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களோடு ஒட்டி வாழ்ந்து இருக்கலாம் என்றும், ஆனால் அதை அவர் செய்யவில்லை என்பதே என்னுடைய வருத்தமாக உள்ளது என்று ரம்யா கூறுகிறார் 

இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் ஆரியை பாலாஜி பாராட்டியதும் ரம்யா தொடர்ந்து எதிர்ப்பை காட்டி வருவதுமான காட்சிகள் உள்ளன


 

From around the web