பாலாஜி தந்தை மரணம்... அடுத்தடுத்த நடைபெறும் சோகம்!!!

சிறுவயதில் பல கஷ்டங்களை அனுபவித்து தற்போது பிக்பாஸின் மூலம் நல்ல புகழ் கிடைத்திருக்கும் இந்த சூழ்நிலையில் பாலாஜிக்கு ஏற்பட்டிருக்கும் சோகம் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் ஆரி பாலா சோம் ரியோ மற்றும் ரம்யா என ஐந்து பேர் இறுதிப்போட்டிக்கு சென்ற நிலையில் ஆரி பிக்பாஸ் டைட்டிலை 

இந்நிலையில் இந்த சீசனில் அனைவரது கவனத்தையும் பெற்று முக்கிய போட்டியாளராக மாறியவர் பாலாஜி. அவர் அடிக்கடி கூறுவது போல தன்னுடைய சொந்த முயற்சியினால் இத்தனை  உயரங்களை அடைந்துள்ளார். 

இந்நிலையில் பாலாஜியின் குடும்பத்தில் சோக நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை தற்போது மரணம் அடைந்துள்ளார். பாலாஜியின் பெற்றோர்கள் தேனி மற்றும் மதுரையை சேர்ந்தவர்கள். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பாலாஜிக்கு சிறுவயது அனுபவங்கள் பலவும் அத்தனை நன்றாக இல்லை. கடந்து வந்த பாதை டாஸ்கின் பொழுது கூட அவர் தனது குடும்பத்தை பற்றி சொன்ன கதை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் தந்தையாரின் இறுதி சடங்கில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவயதில் பல கஷ்டங்களை அனுபவித்து தற்போது பிக்பாஸின் மூலம் நல்ல புகழ் கிடைத்திருக்கும் இந்த சூழ்நிலையில் பாலாஜிக்கு ஏற்பட்டிருக்கும் சோகம் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில்தான் அனிதாவின் அப்பா மரணம் அடைந்த நிலையில் இந்த செய்தி பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web