பெண்களை சந்தோஷப்படுத்தி பதிவு போட்ட பாலா!!!

பாலாஜிக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பின்பு இருந்து 'Simply waste' என்ற பட்டத்தை பெற்றவுடன் அவருக்கு போட்டியின் மீதான ஆர்வம் அதிகமாகியது. அதன் பிறகு பல அதிரடிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

பிக்பாஸில் அவர் அழுது போது டிவியிலேயே அவரது கண்ணீரை துடைப்பது போன்று பல பெண்கள் வீடியோ வெளியிட்திருந்தனர். ஆனாலும் பாலாஜி சிங்கிளா அல்லது யாரையாவது காதலிக்கிறாரா போன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில இடங்களில் ஷிவானிக்கும் அவருக்கும் காதல் இருப்பது போன்று போட்டியாளர்களே கருதினாலும், அது எதுவும் உண்மை இல்லை நாங்க நண்பர்கள்தான் என்று இருவரும் விளக்கமளித்து விட்டனர். அதேபோல் பாலாஜி கையில் ஒரு பெண்ணின் பெயரை பச்சை குத்தி உள்ளார். 

அது யார் என்று பலமுறை கேட்டாலும் இதுவரை அதுபற்றி  அவர் வாய்திறக்க வில்லை. இந்நிலையில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "பிப்ரவரி 14 எல்லாருக்கும் காதலர் தினம். ஆனால் நமக்கு மட்டும் முரட்டு சிங்கிள் தினம்" என்று கூறியுள்ளார். 

இதன் மூலமாக அவர் காதலில் இல்லை என்றும், முரட்டு சிங்கிள் தான் என்றும் தெரிகிறது . இந்த செய்தியை பார்த்த அவரது பெண் ரசிகைகள் செம குஷியில் உள்ளனர்.


 

From around the web