அவசரப்பட்டு கோட்டை விட்ட பாலா: மைனஸ் புள்ளிகளால் வருத்தம் 

 

நேற்று நடந்த பாட்டு பாடும் டாஸ்க்கில் பஸ்ஸரை அவசரப்பட்டு பலமுறை பாலா அழுத்தி சரியான பாடலை பாடாததால் அவருக்கு மைனஸ் புள்ளிகள் கிடைத்தன. இதனை அவர் ரம்யாவிடம் கூறி வருத்தப்பட்டார். இதன் காரணமாக நேற்றைய 4-வது சுற்றில் அவர் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது 

இசை ஒலித்தவுடன் பாடல் தெரிந்தவர்கள் பஸ்ஸரை அழுத்த வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் பாலா கிட்டத்தட்ட நான்கைந்து முறை பஸ்ஸரை அழுத்தினார். ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே சரியான பாடலை பாடினார் என்பதும் மற்ற நேரத்தில் பாடவில்லை என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

balaji

இதனால் பாடல் தெரிந்த மற்றவர்களுக்கும் புள்ளிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தவறாக பஸ்ஸரை அழுத்தியதால் அவருக்கு மைனஸ் பாய்ண்ட் என்ற வகையில் பாலாஜிக்கு கடைசி இடமே கிடைத்தது

இந்த சுற்றில் ரம்யாவுக்கு 7 புள்ளிகளும், ஷிவானிக்கு 6 புள்ளிகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நேற்று நடந்த இரண்டு சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் முடிந்துள்ள நான்கு சுற்றுக்களில் ரம்யாவுக்கு 20 புள்ளிகள் கிடைத்தது என்பதும் அவர் தான் தற்போதைய நிலையில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இன்னும் ஒரே ஒரு சுற்று மட்டும் இருக்கும் நிலையில் ரம்யா நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web