சிறையில் பாலா-ஆரி: என்ன ஆச்சு வொர்ஸ்ட் பெர்மான்ஸ் நாமினேஷனில்?

 

ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் விளையாடிய விதம் மற்றும் அந்த வாரம் முழுவதும் நடந்து கொண்ட விதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு மோசமான போட்டியாளர்கள், சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்யப்படுவது வழக்கம் 

அந்த வகையில் சற்று முன்னர் வெளியான வீடியோவில் மோசமான போட்டியாளர்களாக பாலா மற்றும் ஆரி தேர்வு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் முழுவதும் பாலா மற்றும் ஆரி ஆகிய இருவருமே நல்ல முறையில் விளையாடி வந்தார்கள் என்பதும் குறிப்பாக ஆரி தனது மகள் வந்தபோது கூட டாஸ்க்கில் இருந்து வெளியே வராமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

fight bala aari

அப்படிப்பட்ட ஆரி இன்று மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்பதை பார்வையாளர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அதுமட்டுமின்றி முதல் புரமோவில் ஆரியும் பாலாவும் மோதிக் கொண்ட நிலையில் இருவரும் தற்போது ஒரே சிறையில் இருக்கும் போது மோதிக் கொள்கின்றனர். இருவரும் ஆவேசமாக ஒருவருக்கு ஒருவர் பேசும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன

மொத்தத்தில் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆரி மற்றும் பாலா ஆகிய இருவரும் கடைசி நேரத்தில் மோசமான போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது சதியா அல்லது உண்மையா என்பதை இன்றைய நிகழ்ச்சியை முழுவதும் பார்த்தால் தான் தெரிய வரும்


 

From around the web