பிடிவாரண்ட் பிறப்பிக்கவே இல்லை, எல்லாம் பொய்: ஷங்கர் அறிக்கை

 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தின் 2வது பாகமும் ‘2.0’ என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷங்கர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்ததால், எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ஷங்கரும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. 

இதனை அடுத்து இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை எழும்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் இந்த பிடிவாரண்ட் செய்தி முற்றிலும் பொய் என ஷங்கர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

shankar

எழும்பூர்‌ நீதிமன்றம்‌ எனக்கு எதிராக பிடி வாரண்ட்‌ பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப்‌ பார்த்து நான்‌ அதிர்ச்‌சியடைந்தேன்‌. எனது வழக்கறிஞர்‌ திரு.சாய்‌ குமரன்‌, நீதமன்றத்தை இன்று அணுகி இந்தச்‌ செய்தி குறித்து அவர்களின்‌ கவனத்துக்கு கொண்டு சென்றார்‌. எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும்‌ பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்‌.

இணையத்தில்‌ தினசரி நீதிமன்ற வழக்குகளின்‌ நிகழ்வுகள்‌ பதிவேற்றுதலில்‌ நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல்‌ இப்படி ஒரு பொய்யான செய்‌தி உலவுவதைப்‌ பார்க்க ஆச்சரியமாக இருக்கறது. 'இந்த விஷயம்‌ எனது குடும்பத்துக்கும்‌, நல விரும்பிகளுக்கும்‌ தேவையில்லாத மன உளைச்சலைத்‌ தந்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள்‌ இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும்‌ பகிரவேண்டும்‌ என்று தயவுகூர்ந்து அன்‌போடு கேட்டுக்கொள்கிறேன்‌..

இவ்வாறு ஷங்கர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

From around the web