ஜார்ஜ் பிளாயிட்டைக் கொன்ற போலீசாரின் ஜாமீனுக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை…

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர். போராட்டக்காரர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை எனில் நான் ராணுவத்தைக்கூட பயன்படுத்துவேன் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் யாரும் போராட்டத்தைக்
 
ஜார்ஜ் பிளாயிட்டைக் கொன்ற போலீசாரின் ஜாமீனுக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை…

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், மே 31 ஆம் தேதி வெள்ளை மாளிகை முன்பு கருப்பின மக்கள் பலரும் போராட்டத்தினைத் துவக்கினர்.

போராட்டக்காரர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை எனில் நான் ராணுவத்தைக்கூட பயன்படுத்துவேன் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் யாரும் போராட்டத்தைக் கைவிடவில்லை.

ஜார்ஜ் பிளாயிட்டைக் கொன்ற போலீசாரின் ஜாமீனுக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை…

அதேபோல் மற்றொருபுறம் கருப்பின மக்களுக்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இது ஒரு நாட்டின் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் உலக அளவிலான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், ஜார்ஜ் பிளாய்டின் கொலை வழக்கில் அமெரிக்க போலீஸ் அதிகாரியின் ஜாமீனுக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக, அனைவரும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூன் 29 ஆம் தேதி கோர்ட்டுக்கு மீண்டும் வருகிறது குறிப்பிடத்தக்கது.

From around the web