என்னது இது சின்னபுள்ள தனமா வேலை நேரத்தில விளையாட்டு!...
படப்பிடிப்பு தளத்தில் டென்னிஸ் விளையாடிகின்றனர் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகள்.
Thu, 1 Apr 2021

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் முழுக்க முழுக்க ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி பேசுகிறது.
ஆரம்பத்தில் சீரியலுக்கு சரியான வரவேற்பு இல்லை என்றாலும் இப்போதெல்லாம் மக்கள் அதிகம் சீரியலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சீரியலில் அண்மையில் வந்த விறுவிறுப்பான காட்சிகள் மக்களை பார்க்க வைத்தது. இந்த சீரியல் எழில் என்ற வேடத்தில் நடிப்பவர் விஷால்.
இவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் சீரியலில் அவருக்கு அம்மாவாக நடிப்பவர் டென்னிஸ் விளையாடுகிறார். வீடியோ வெளியாக அதைப்பார்த்த மக்கள் படப்பிடிப்பில் ஜாலியாக உள்ளார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.