நடிகர் சதீஷுக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்

 

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. மேலும் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது 

இந்த நிலையில் இன்று சதீஷ்க்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செய்தியை உறுதி செய்த நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் தனக்கு பெண் குழந்தை பிறந்து பிறந்து இருப்பதாகவும் அனைவரின் வாழ்த்துக்களை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார் 

இதனையடுத்து பல திரையுலக பிரபலங்கள் அவருக்கும் அவருடைய குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகர் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் ப்ரோ என்று தெரிவித்துள்ளார்

From around the web