பிக்பாஸ் தமிழ் பிரபலத்திற்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

 
biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்த நடிகர் மகத்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகத், பிராய்ச்சி மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின் சில மாதங்களுக்கு முன் பிராய்ச்சி மிஸ்ரா கர்ப்பமானார் என்பதும் தெரிந்ததே. பிராய்ச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த மகத், வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார் 

இந்த நிலையில் நேற்று இரவு பிராய்ச்சி மிஸ்ராவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என தகவல் வெளிவந்துள்ளது. எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மகத் பதிவு செய்துள்ளார். இதனை அதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் பிரபலங்கள் மகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிராச்சி மிஸ்ரா மகனுடன் இருக்கும் புகைப்படத்தையும் மகத் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


 

From around the web