பழம்பெரும் தயாரிப்பாளர் மறைவு

விஜயா வாகினி புரொடக்சன்ஸ் நிறுவனம் பழம்பெருமை வாய்ந்தது. அந்தக்காலத்து படங்களான பாதாள பைரவியில் ஆரம்பித்து, எங்க வீட்டு பிள்ளை,, மிஸ்ஸியம்மா,மாயா பஜார், நம்மவர், வீரம், வேங்கை, பைரவா, தாமிரபரணி உள்ளிட்ட படங்களை தயாரித்தது. இதன் தயாரிப்பாளர்கள் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள். அதனால் தமிழிலும் , தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படம் தயாரித்து வந்தனர். இவர்கள் தயாரிப்பில் ஆரம்ப கால பாதாள பைரவி என்ற படம் மாயா ஜாலங்கள் என்றால் இப்படியும் இருக்குமா என்ற அளவு ரசிகர்களை ஆச்சரியப்பட
 

விஜயா வாகினி புரொடக்சன்ஸ் நிறுவனம் பழம்பெருமை வாய்ந்தது. அந்தக்காலத்து படங்களான பாதாள பைரவியில் ஆரம்பித்து, எங்க வீட்டு பிள்ளை,, மிஸ்ஸியம்மா,மாயா பஜார், நம்மவர், வீரம், வேங்கை, பைரவா, தாமிரபரணி உள்ளிட்ட படங்களை தயாரித்தது.

பழம்பெரும் தயாரிப்பாளர் மறைவு

இதன் தயாரிப்பாளர்கள் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள். அதனால் தமிழிலும் , தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படம் தயாரித்து வந்தனர்.

இவர்கள் தயாரிப்பில் ஆரம்ப கால பாதாள பைரவி என்ற படம் மாயா ஜாலங்கள் என்றால் இப்படியும் இருக்குமா என்ற அளவு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த படமாகும்.மிகப்பெரும் வெற்றிபடமாகும்.

பின்பு வந்த மாயா பஜார் படமும் அந்த வகையை சார்ந்ததே. ரங்காராவ் சாப்பிடும் கல்யாண சமையல் சாதம் பாட்டிலேயே முழு மாயாஜாலத்தையும் அறிந்து கொள்ளலாம்.லட்டு, இட்லி, பலகாரங்கள் என அனைத்தும் பறந்து போய் கடோத்கஜனான ரங்காராவ் வாயில் உட்காரும்.

பின்பு எம்ஜிஆரை வைத்து தயாரித்த எங்க வீட்டு பிள்ளை படம் இன்று வரை எம்.ஜிஆர் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் படமாகும்.

ரஜினியை வைத்து தயாரித்த உழைப்பாளி படமும் மிகப்பெரும் வெற்றிப்படமாகும். இவர்கள் கம்பெனி லோகோவிலேயே முதலில் நான் ஆணையிட்டால் பாடலும், உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா என்ற பாடலுடன் தான் படத்தின் டைட்டில் ஆரம்பமாகும்.

பல நூறு படங்களை தயாரித்த இதன் நிர்வாகி

வெங்கட்ராம ரெட்டி காலமானார்.

அவருக்கு வயது 75. தமிழ் திரையுலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா வாகினி புரொடக்சன்ஸ் நிறுவனத்தை, பி.நாகிரெட்டி மறைவுக்குப் பின் அவரது இளைய மகன் பி.வெங்கட்ராமரெட்டி நிர்வகித்து வந்தார்.

From around the web