அயோக்யாவில் 48 மணி நேரம் நடித்த விஷால்

விஷால் நடித்து வரும் புதிய திரைப்படம் அயோக்யா. இந்த படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விஷாலுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் என்று பேசப்பட்ட நிலையில், இந்த படத்தில் வில்லனாக பார்த்திபன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விஷாலுடன் ஆடுகளம் நரேன், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றுக்காக விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், படத்தின் நாயகன் விஷால் மட்டும் சுமார்
 
அயோக்யாவில் 48 மணி நேரம் நடித்த விஷால்

விஷால் நடித்து வரும் புதிய திரைப்படம் அயோக்யா. இந்த படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.


விஷாலுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் என்று பேசப்பட்ட நிலையில், இந்த படத்தில் வில்லனாக பார்த்திபன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

விஷாலுடன் ஆடுகளம் நரேன், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றுக்காக

விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், படத்தின் நாயகன் விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு-பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து, கோர்ட்டு காட்சிகள் சிறப்பாக அமைய தொடர்ந்து நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்துக்காக விஷால் தனது கடும் முயற்சியினால் மிடுக்காக ஒரு கம்பீரமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி இருந்த நிலையில், தற்போது தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபட்டு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார் என்று படக்குழுவினர் மத்தியில் பேசப்பட்டது.

படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web