46 ஆண்டுகளுக்கு பின் அதே டைட்டிலில் ரீஎண்ட்ரி ஆகும் ஏவிஎம் நிறுவனம்

கோலிவுட் திரை உலகின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரோடக்சன்ஸ். கடந்த 1945ம் ஆண்டு ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனம் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏவிஎம் நிறுவனம் எந்த திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்து அதற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது
 
46 ஆண்டுகளுக்கு பின் அதே டைட்டிலில் ரீஎண்ட்ரி ஆகும் ஏவிஎம் நிறுவனம்

கோலிவுட் திரை உலகின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரோடக்சன்ஸ். கடந்த 1945ம் ஆண்டு ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனம் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளது

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏவிஎம் நிறுவனம் எந்த திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்து அதற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது

ஆர்யன் ஷாம் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ’அந்த நாள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் ஏவிஎம் புரொடக்ஷன் நிறுவனம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் ஒன்றை கடந்த ஆண்டு 1954ஆம் ஆண்டு தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது

46 ஆண்டுகள் கழித்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த அதே படத்தலைப்பில் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவி என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ராபர்ட் சற்குணம் என்பவர் இசையமைக்க உள்ளார். சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவில் காஸ்ட்ரோ படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது

From around the web