காதலில் குதித்து முத்தெடுக்கும் சீரியல் நடிகர்.... ரொமாண்டிக் மன்னனா இருப்பாரு போலயே!!
 

தனது வருங்கால மனைவியுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்  அவினாஷ்
 

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் சீரியல் நடிகரான அவினாஷ் அசோக் தனது காதலியை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிவரும் 'அம்மன்' என்ற சீரியலில் நடித்துவரும் அவினாஷ் இதற்கு முன்பதாக சன் டிவியில் பிரபலமான 'அழகு' சீரியலில் நடித்தவர். மேலும் அவர் சாக்லேட் என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

இது மட்டுமல்லாது பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார் உதாரணமாக. டான்ஸ் கேரளா டான்ஸ் மாஸ்டர், தில்லானா தில்லானா, ஓடி விளையாடு பாப்பா, டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 போன்ற பல ஷோக்களில் பங்கேற்று பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரும் அவரது காதலி தெரசாவும் சிறுவயதிலிருந்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது வருங்கால மனைவியுடன் புகைப்படத்தை பதிவிட்ட அவர் கூறும் பொழுது "நான் சத்தியம் செய்கிறேன். இன்று நான் உன்னை காதலிக்கும் அந்த அளவிற்கு இனிமேலும் உன்னை  காதலிக்க முடியுமா என்று தெரியாது. ஆனால் நாளை வந்தால் அது தெரிந்துவிடும். ஐலவ்யூ தெரசா" என்று ரொமான்டிக்காக கூறியுள்ளார்.

From around the web