பிப்ரவரி 12ல் வருகிறார் அட்டகத்தி....!

"இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகர் தினேஷ். இவரது நடிப்பில் வெளியாகியிருந்த "அட்டகத்தி" என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்து ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியது .இதனால் இவர் ரசிகர்களிடையே "அட்டகத்தி தினேஷ்" என்றே அழைக்கப்பட்டார்.

மேலும் இவர் இயக்குனர் "வெற்றிமாறன்" இயக்கத்தில் "விசாரணை" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இயக்குனர் வெற்றிமாறன் "ஆடுகளம்", "அசுரன்" போன்ற வெற்றி படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் "குக்கூ".இத்திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் விதம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் ரசிகர்களின் கண்களிலிருந்து கண்ணீரை வர செய்தது.
"சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் ரஜினிகாந்துடன் "கபாலி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது தான் நடித்து வெளியாகவுள்ள படம் "நானும் சிங்கிள் தான்". இத்திரைப்படம் இந்த மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தினை இயக்குனர் கோபி இயக்கியுள்ளார். "நானும் சிங்கிள் தான்" என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
.