இண்டிபெண்டன்ஸ்க்கு  "அட்டாக்!"

"அட்டாக்" படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது!
 
"டரன் ஆதர்ஷ்" ட்விட்டர் பக்கம் கூறும் இந்தத் தகவல்!

இந்த வருடம் சுதந்திர தின வாரத்தில் "அட்டாக்" படம் வெளியாகும் என "தரன் ஆதர்ஷ்" தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். "அட்டாக்" திரைப்படமானது கடந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்திரைப்படம் வெளியாகாமல் போனது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்திரைப்படமானது ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளார். இதனால் இத்திரைப்படத்தில் படக்குழுவினர் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர்.

john abraham

இத்திரைப்படத்தில் பிரபல இந்திய நடிகரான "ஜான் ஆபிரகாம் "நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜான் ஆபிரகாம் "வெல்கம் பேக்", "ராக்கிஹாண்ட்சம்" போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் தனது நடிப்பாலும், தனது திறமையாலும் இன்று ஹிந்தி சினிமா மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலும் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டுள்ளார். தற்போது தன் நடிப்பில் உருவாகியுள்ள "அட்டாக்" திரைப்படமானது ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் இவருடன் "நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்"  நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியாக உள்ள திரைப்படத்தில் "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தின் கதாநாயகியான "ரகுல் ப்ரீத் சிங்" இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரின் கூட்டணியில் இத் திரைப்படமானது இந்த ஆண்டு வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்திலும் எதிர்பார்ப்பிலும் காத்துக் கொண்டுள்ளனர்.

From around the web