இரண்டு விஜய்களுடன் மோத முடிவு செய்த அதர்வா

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் அதர்வா, தனது சொந்த தயாரிப்பாக தயாரித்துள்ள திரைப்படம் ‘செம போத ஆகாதே. ‘பாணா காத்தாடி’ படத்தில் தன்னை திரையுலகில் அறிமுகம் செய்த பத்ரி வெங்கடேஷூக்கு இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள அதர்வா, இந்த படத்தில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் ‘செம போத ஆகாதே’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் தான் விஜய் ஆண்டனியின் ‘காளி’
 

இரண்டு விஜய்களுடன் மோத முடிவு செய்த அதர்வாதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் அதர்வா, தனது சொந்த தயாரிப்பாக தயாரித்துள்ள திரைப்படம் ‘செம போத ஆகாதே. ‘பாணா காத்தாடி’ படத்தில் தன்னை திரையுலகில் அறிமுகம் செய்த பத்ரி வெங்கடேஷூக்கு இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள அதர்வா, இந்த படத்தில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ‘செம போத ஆகாதே’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் தான் விஜய் ஆண்டனியின் ‘காளி’ மற்றும் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதூ. விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டனின் படங்களோடு அதர்வா மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு விஜய்களுடன் மோத முடிவு செய்த அதர்வாஅதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் தவிர அதர்வா, நயன்தாராவுடன் ‘இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்தை மற்றும் பூமராங் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

From around the web