ஜப்பான் நாட்டின் விருதை பெறுமா தனுஷின் அசுரன்?

 

நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்று உள்ளார் என்பதும் அவரது படங்களும் சில விருதுகளை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே அதேபோல் அவரது ஒரு சில திரைப்படங்கள் வெளிநாட்டு விருதுகளுக்கும் தேர்வு பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான ’அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்ததே 

asuran

இந்த நிலையில் தற்போது இந்த படம் ஒசாகா தமிழ் திரைப்பட விருதுக்கு தேர்வு பெற்று உள்ளது. மார்ச் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் நடைபெறும் தமிழ் திரைப்பட விருது விழாவில் திரையிடவும் சிறந்த திரைப்படத்திற்காக தேர்வு செய்யவும் இந்த திரைப்படம் தேர்வு பெற்று உள்ளது

இதனை அடுத்து தனுசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் ஒசாகா தமிழ் திரைப்பட விருதை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web