அசுரன் படத்தை சீக்கிரம் போட்டதால் தர்ணா போராட்டம்

நேற்று தனுஷ் நடித்த அசுரன் படம் ரிலீஸ் ஆனது. வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்துக்கு பாஸிட்டிவான ரிவ்யூக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தியேட்டரில் கூட்டம் களை கட்டுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசமான கதைக்களத்தில் தனுஷ் நடித்திருப்பதும், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அவர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை முறையையும் இப்படம் சொல்லி இருப்பதாலும் இப்படத்துக்கு ரசிகர்கள் திரளுவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று இரவு காட்சி சில நிமிடங்களுக்கு முன்னதாகவே
 

நேற்று தனுஷ் நடித்த அசுரன் படம் ரிலீஸ் ஆனது. வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்துக்கு பாஸிட்டிவான ரிவ்யூக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தியேட்டரில் கூட்டம் களை கட்டுகிறது.

அசுரன் படத்தை சீக்கிரம் போட்டதால் தர்ணா போராட்டம்

நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசமான கதைக்களத்தில் தனுஷ் நடித்திருப்பதும், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அவர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை முறையையும் இப்படம் சொல்லி இருப்பதாலும் இப்படத்துக்கு ரசிகர்கள் திரளுவதை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று இரவு காட்சி சில நிமிடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டதால் ரசிகர்கள் கோபமடைந்து தியேட்டர் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

திரும்ப முதலில் இருந்து ஒளிபரப்பியபோது டெக்னிக்கலாக ஏதோ கோளாறு ஆகிவிட்டதாம் தியேட்டரில் இதனால் குழப்பமான தியேட்டர் நிர்வாகம்

டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிப்பதாகவும், ஆன்லைன்லில் முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் நிர்வாகம் உறுதியளித்ததை தொடர்ந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். ரசிகர்களின் போராட்டம் காரணமாக திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

From around the web