ஸ்டேடியத்திலேயே வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஸ்டெப் போட்ட அஸ்வின்!!!

அஸ்வின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
 

சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை. 

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்படும் குடிபோதைக்கு அடிமையான பேராசிரியர் ஒருவருக்கு, அந்த பள்ளியின் குழந்தைகளைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தி வரும் கேங்க்ஸ்டர் ஒருவருடன் மோதல் ஏற்படுகிறது எனபது தான் கதை. இந்நிலையில் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் மிகவும் பிரபலம். அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. 

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருக்குபோது மைதானத்தில் ஒலிபரப்பான 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்களையும் ஒரு சதமும் விளாசி சாதனை படைத்துள்ளார். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரசிகர்கள், அஸ்வினிடம் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாட சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து அவர் ஆடிய அந்த வாத்தி கம்மிங் வீடியோ தற்போது வேற லெவல் வைரலாகி வருகிறது.

From around the web