ஆர்யா சாயிஷா விரைவில் திருமணம்

நடிகை சயீஷாவை வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகர் ஆர்யா அறிவித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் சயீஷா. 38 வயதாகும் ஆர்யாவும் 21 வயதாகும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த போது காதலித்து வந்தனர். இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சயீஷாவுடனான திருமணம் குறித்த அறிவிப்பை ஆர்யா வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் சயீஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, காதலர் தின
 

நடிகை சயீஷாவை வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகர் ஆர்யா அறிவித்துள்ளார்.

ஆர்யா சாயிஷா விரைவில் திருமணம்

கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் சயீஷா. 38 வயதாகும் ஆர்யாவும் 21 வயதாகும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த போது காதலித்து வந்தனர். இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சயீஷாவுடனான திருமணம் குறித்த அறிவிப்பை ஆர்யா வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் சயீஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, காதலர் தின வாழ்த்துகளை ஆர்யா கூறியுள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆசியோடு மார்ச் மாதத்தில் சயீஷாவுக்கும் தனக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் ஆர்யா அறிவித்துள்ளார். 

From around the web