நடிகர் ஆர்யாவின் தம்பிக்கு பாவனாவுடன் திருமணம்

மதராச பட்டணம், ராஜா ராணி உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யா. இவர் ‘புத்தகம்’ ‘அமரகாவியம்’ , ‘எட்டுத்திக்கும் மதயானை,’ ‘சந்தன தேவன்’போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் சத்யாவுக்கும், துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவுக்கும் காதல் மலர்ந்ததாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரம் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து சத்யாவுக்கும், பாவனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சத்யா-பாவனா திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை
 

நடிகர் ஆர்யாவின் தம்பிக்கு பாவனாவுடன் திருமணம்

மதராச பட்டணம், ராஜா ராணி உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யா. இவர் ‘புத்தகம்’ ‘அமரகாவியம்’ , ‘எட்டுத்திக்கும் மதயானை,’ ‘சந்தன தேவன்’போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் சத்யாவுக்கும், துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவுக்கும் காதல் மலர்ந்ததாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரம் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து சத்யாவுக்கும், பாவனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

சத்யா-பாவனா திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறவுள்ளதாகவும், இந்த திருமணத்தில் கோலிவுட் திரையுலகினர் பலர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web