அருண்விஜய்-ஹரி படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை!

 

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே

டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஏற்கனவே பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமான நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். அவர்தான் ராதிகா சரத்குமார், இவர் அனேகமாக ப்ரியா பவானிசங்கர் தாயாராக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ராதிகா இந்த படத்தில் இணைந்தது குறித்த முறையான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

radhika

மேலும் இந்த படத்தில் யோகி பாபு பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் மேலும் சிலர் இணையவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


 

From around the web