ஆர்ட்டிகிள் 15 படத்தினை ரீமேக் செய்யும் அருண்ராஜா காமராஜ்..

அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமாவில் காமெடியனாக, நடிகராக, இயக்குனராக, பாடல் ஆசிரியராக, பாட்டுப் பாடுபவராக எனப் பல அவதாரங்களைக் கொண்டு இருக்கிறார். இவர் ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், ரெமோ, மரகத நாணயம், காத்திருப்போர் பட்டியல், நட்புன்னா என்னான்னு தெரியுமா? போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 30 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார், இவர் 20 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியும் உள்ளார். அசுரன் படத்தில் இவர் எழுதிய வா எழுந்து வா, காலா மற்றும்
 
ஆர்ட்டிகிள் 15 படத்தினை ரீமேக் செய்யும் அருண்ராஜா காமராஜ்..

அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமாவில் காமெடியனாக, நடிகராக, இயக்குனராக, பாடல் ஆசிரியராக, பாட்டுப் பாடுபவராக எனப் பல அவதாரங்களைக் கொண்டு இருக்கிறார். இவர் ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், ரெமோ, மரகத நாணயம், காத்திருப்போர் பட்டியல், நட்புன்னா என்னான்னு தெரியுமா? போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் 30 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார், இவர் 20 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியும் உள்ளார். அசுரன் படத்தில் இவர் எழுதிய வா எழுந்து வா, காலா மற்றும் தர்பார் படத்தின் பாடல்கள் மாஸ் ஹிட் பாடல்களாகும்.

ஆர்ட்டிகிள் 15 படத்தினை ரீமேக் செய்யும் அருண்ராஜா காமராஜ்..

சமீபத்தில் இவர் பல மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ள பாடல் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலாகும். கனா படத்தின்மூலம் இயக்குனராக உருவெடுத்த இவருக்கு முதல் படமே எதிர்பார்க்காத அளவு ஹிட் ஆனது.

பெண்கள் கிரிக்கெட்டினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீ மேக் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது இரண்டாவது படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றிப் படமாக இருந்த ஆர்ட்டிகிள் 15 என்ற திரைப்படத்தினை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். மேலும் இப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web