திரில்லர் படமாக வெளியாகி ஹிட் ஆன அருண் விஜயின் தடம்!!

தடம் திரைப்படம் 2019ஆம் ஆண்டில் வெளியான திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மகிழ் திருமேனி என்ற இயக்குநர் எழுதி இயக்கி இருந்தார். அருண் விஜய் எழில் மற்றும் கவின் என்று இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார், தன்யா ஹோப், இசுமிருதி வெங்கட் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களி்ல் நடித்து இருந்தனர். இரட்டை குழந்தைகளாய் பிறக்கும் அருண் விஜய் அவர்களின் தாய் மற்றும் தந்தைக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளால் சிறுவயதிலேயே பிரிந்து விடுகின்றனர். இவர்கள்
 
திரில்லர் படமாக வெளியாகி ஹிட் ஆன அருண் விஜயின் தடம்!!

தடம்  திரைப்படம் 2019ஆம் ஆண்டில் வெளியான திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மகிழ் திருமேனி என்ற இயக்குநர் எழுதி இயக்கி இருந்தார்.

 அருண் விஜய்  எழில் மற்றும் கவின் என்று இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார், தன்யா ஹோப், இசுமிருதி வெங்கட் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களி்ல் நடித்து இருந்தனர்.

இரட்டை குழந்தைகளாய் பிறக்கும் அருண் விஜய் அவர்களின் தாய் மற்றும் தந்தைக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளால் சிறுவயதிலேயே பிரிந்து விடுகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் தாயாக சோனியா அகர்வால் நடித்து இருப்பார், வங்கியில் வேலை பார்க்கும் இவர் தான் கொண்டிருந்த சூதாட்டப் பழக்கத்தினால் பணம் முழுவதையும் அதிலேயே விட்டு விடுகிறார்.

திரில்லர் படமாக வெளியாகி ஹிட் ஆன அருண் விஜயின் தடம்!!

சோனியா அகர்வாலின் சூதாட்டப் பழக்கமே அவர்களது பிரிவிற்கு முக்கிய காரணமாகும். அதன்பின்னர் பிரிந்த குழந்தைகள் வேறு மாதிரியான சூழலில் வளர்கின்றனர்.

ஒருவன் சிவில் இன்ஜினியராகவும், மற்றொருவன் சூதாட்டப் பழக்கம் கொண்டவனாகவும் வளர்கிறான். ஒரு கொலைக்  குற்றத்திற்காக காவல் ஆய்வாளர் பெப்சி விஜயன் எழிலைக் கைது செய்கிறார்.

அதேபோல் குடித்து விட்டு வண்டி ஓட்டிய கவினும் கைது செய்யப் படுகிறார். இவர்கள் இருவரும் தான் செய்யவில்லை என்று கூறுவதும், அது தொடர்பாக விசாரிக்கையில் இருவர் கூறும் கதைகளும் ஒரே மாதிரியாக இருக்க, போலீசார் குற்றத்தினை நிரூபிக்க முடியாமல் திணறிப் போயினர்.

இதனால் வேறு வழியில்லாமல் நீதிபதி இருவரையும் விடுதலை செய்கிறார். விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது.

From around the web