குறைசொல்லும் டாஸ்க்கில் ஆரிக்கு கடைசி இடம்: அப்ப அவர் குறை சொல்லவே இல்லையா?

 

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று 6-வது சுற்றாக சக போட்டியாளர்கள் குறைகளை எடுத்துச் சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற ஆறு போட்டியாளர்களின் குறைகளை வரிசைப்படுத்தி வந்தனர்

முதன் முதலில் வந்த ஆரி வழக்கம்போல் தனது ஞாபக சக்தியை பயன்படுத்தி ஒவ்வொரு போட்டியாளர்களின் குறைகளை கூறினார். இந்த அளவுக்கு ஆரியால் எப்படி பழைய டாஸ்குகளை எல்லாம் மனதில் ஞாபகம் வைத்து பேசுகிறார் என்று சக போட்டியாளர்கள் ஆச்சரியமடைந்தனர் 

இந்த நிலையில் ஆரியை அடுத்து வந்த ஷிவானி வழக்கம் போல் ஒவ்வொரு ஒவ்வொருவரின் குறைகளையும் சுருக்கமாக சுட்டிக்காட்டினார். அதன்பின் சோம், ரியோ ஆகியோரும் மற்ற போட்டியாளர்களை குறைகளை சுட்டிக் காட்டினார் 

aari

சோம் ஆரியை குறை கூறும்போது, ‘என்னிடம் நீ மற்றவர்களை பற்றி பேசியது போல் மற்றவர்களிடமும் என்னை பற்றி பேசி இருப்பாய் அல்லவா? இந்த வீட்டில் இன்று தான் குறைகள் சொல்லும் டாஸ்க் வருகிறது. ஆனால் ஆரி முதல் நாள் முதலே இந்த டாஸ்க்கை செய்து வருகிறார் என்றும், இந்த வீட்டில் மொத்தம் 70 கேமராக்கள் இருக்கிறது என்றால் ஆரியை சேர்த்து 71 கேமரா உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் குறைசொல்லும் டாஸ்க் முடிந்தவுடன் அனைத்து போட்டியாளர்களையும் வரிசைப்படுத்தும் நிகழ்வுகள் வந்தபோது ஆரிக்கு கடைசி இடமான ஏழாவது இடமே கிடைத்தது. குறை சொல்வதில் ஆரிக்கு 7வது இடம் என்றால் அவர் குறை சொல்லவே இல்லை என்று தான் அர்த்தம் என்றும், அவர் ஒவ்வொருவரையும் குறை சொல்கிறார் என்பது பொய் தானே என்று ஆரியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

From around the web