செல்ல மகளை பார்த்தும் ஆடாமல் அசையாமல் இருந்த ஆரி: இவர் தான் டைட்டில் வின்னர்!

 

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் ப்ரீஸ் டாஸ்க்கில் செல்ல மகளை அருகில் பார்த்தும் ஆடாமல் அசையாமல் இருந்த ஆரியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் இவன் தான்யா டைட்டில் வின்னர் என்று கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ப்ரீஸ் டாஸ்க்கில் உறவினர்கள் வரும்போது ப்ரீஸ் டாஸ்க்கில் இருந்தாலும் தங்களது உறவினர்களை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு ஹவுஸ்மேட்ஸ் டாஸ்க்கில் இருந்து வெளியேறி அவர்களை கட்டிப்பிடித்து அழும் காட்சிகள் தான் இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம் 

aari daughter1

ஆனால் சற்று முன் வெளியான வீடியோ ஒன்றில் ஆரியின் குழந்தை பிக்பாஸ் வீட்டின் உள்ளே வரும் போது ப்ரீஸ் டாஸ்க்கில் இருக்கும் ஆரி கொஞ்சம் கூட ஆடவில்லை அசையவில்லை அவருடைய முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை

பிக்பாஸ் ’ரிலீஸ்’ என்று சொன்ன பிறகு தான் தனது மகளை அவர் கட்டிப் பிடித்தார். ஆரியால் மட்டும் எப்படி ஆடாமல் அசையாமல் இருக்க முடிகிறது என்று சக போட்டியாளர்கள் ஆச்சரியமடைந்தனர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது


 

From around the web