முதலிடம் கேட்ட ஆரிக்கு கிடைத்தது 5வது இடம் தான்: 9வது இடத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட கேபி 


 

 

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக பால்&கேட்ச் என்ற டாஸ்க் நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. குழாயில் இருந்து வரும் பந்துகளை போட்டியாளர்கள் பிடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்கின் நோக்கம். 

இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் மிக சிறப்பாக விளையாடியவர்களை வரிசைப்படுத்த வேண்டும் என பிக்பாஸ் நேற்று கோரிக்கை விடுத்தார். பிக்பாஸ் வீட்டில் தற்போது 9 பேர் இருந்துவரும் நிலையில் 1 முதல் 9 வரை போட்டியாளர்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அதற்கான காரணத்தையும் கூற வேண்டும் என அறிவிக்கப்பட்டது 

aari rio

இதனையடுத்து போட்டியாளர்களில் ஒரு சிலர் முதலில் முதல் இடத்திற்கு போட்டி போட்டனர். ரம்யா, ஆரி மற்றும் ரியோ ஆகிய மூவரும் முதலிடத்திற்கு தங்களை ஏன் தேர்வு செய்யவேண்டும் என்ற காரணத்தைக் கூறினார்கள். ஒரு கட்டத்தில் இதுகுறித்து ஆரி மற்றும் ரியோவுக்கு வாக்குவாதம் அதிகரித்தது. அதன்பின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ரியோவுக்குதான் முதலிடம் என்பது உறுதிசெய்யப்பட்டது 

இதனை அடுத்து இரண்டாவது இடத்திற்கு ஆரி மட்டும் ரம்யா போட்டியிட்டனர். அப்போதும் ஆரிக்கு வாக்குகள் கிடைக்காததால் ரம்யா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதல் மூன்று இடத்தில் வருபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என பிக்பாஸ் அறிவித்ததால் மூன்றாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்று விரும்பிய ஆரிக்கு மூன்றாவது இடமும் கிடைக்கவில்லை. சோம் 3வது இடத்தை பிடித்தார். கடைசியில் ஐந்தாவது இடம் தான் ஆரிக்கு கிடைத்தது

நான்காவது இடத்தில் பாலா, ஆறாவது இடத்தில் அனிதா, ஏழாவது இடத்தில் ஆஜித், 8வது இடத்தில் ஷிவானி மற்றும் ஒன்பதாவது இடத்தில் கேபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கேபி 9வது இடத்தை தானே விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web