மனைவி சொன்னதை கேட்டு பெருமிதம் அடைந்த ஆரி!

 

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும் சுவாரசியங்கள், கண்கலங்க வைக்கும் நெகிழ்வுகள், ஆத்திரமான தருணங்கள், ஜாலியான அரட்டை, ஆகியவை இந்த வருகையின்போது இருந்தன என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தற்போது ஆரியின் மனைவி மற்றும் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வரும் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் ஆரியின் மனைவி ’நீங்கள் இப்போது வரை சரியாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் எப்படி இருக்கிறீர்களோ அதே மாதிரி தான் இங்கும் இருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை யாரையும் புண்படுத்தவில்லை. குறிப்பாக போலியாக நீங்கள் விளையாடவில்லை என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது, இதேபோல் விளையாடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார் 

aari and wife

ஆரி தனது மனைவி கூறியதைக் கேட்டு மிகவும் பெருமை அடைந்தார். ஆரியின் பெயர் வெளியில் பாசிட்டிவாக இருப்பதை அவரின் மனைவி மறைமுகமாக கூறியதை அடுத்து ஆரி மிகுந்த சந்தோஷம் அடைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web