ஆரி என்னை ரொம்ப பயமுறுத்துறாரு: கேபியிடம் புலம்பிய ரியோ!

 

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தபோது அனைவருமே ஆரியைப் பற்றி விசாரிக்கும்போதே சக போட்டியாளர்களுக்கு ஆரி மீது பயம் ஏற்படத் தொடங்கிவிட்டது. அதேபோல் நேற்றைய டெலிகாலர் ரம்யாவிடம் ஆரி போல் நெத்தியில் அடித்தால்போல் நேருக்கு நேர் எப்போது கேட்கப் போகிறீர்கள் என்று கேட்டதும் மற்ற ரம்யாவுக்கு மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் ஒரு பயத்தை உருவாக்கி விட்டது 

rio fear

இந்த நிலையில் இன்றைய இரண்டாம் புரமோவில் கேபியிடம் ரியோ கூறிய போது ’ ஆரி என்னை பயமுறுத்துகிறார், என்னை நீங்கள் தவறாக சொன்னால் மக்கள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்று கூறுகிறார். அவருடைய குழந்தை வந்தபோது நான் அந்த குழந்தையிடம் அன்பாகத்தான் விளையாடினேன். ஆனால் அவர் என்னை பயமுறுத்துகிறார் 

எல்லோரும் விளையாடும் போது நீங்கள் மட்டும் ஏன் தனியாக இருந்தீர்கள், அதில் கலந்து கொள்ளவில்லை என்று நான் சாதாரணமாக கேட்டதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டு என்னை பயமுறுத்துகிறார் என்று புலம்பி வருகிறார். ஏற்கனவே ரம்யாவுக்கு எவிக்சன் பயத்தை காட்டிய ஆரி, தற்போது ரியோவுக்கும் பயத்தை காட்டி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலாஜி ஏற்கனவே ஆரியை பார்த்து பயந்ததால் தான் கோபத்தில் கத்தி கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web