ஆரி தான் டைட்டிலை வெல்வார்: முன்னால் பிக்பாஸ் போட்டியாளர் கருத்து!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அளவுக்கு வேறு எந்த போட்டியாளரும் விளையாடவில்லை என்பதே பெரும்பாலான பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. நியாயமாகவும் நீதியாகவும் நேர்மையாகவும் ஆரி விளையாடுகிறார் என்பதும் சக போட்டியாளர்கள் குறைகளை சுட்டிக் காட்டுவது தவறான செயல் அல்ல என்றும் போட்டியே ஒரு மைண்ட்கேம் என்ற போது இங்கு வந்து என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆரி அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி வருவதாகவும் ஆனால் தவறுகளை சுட்டிக்காட்டி மட்டுமே ஆரி விளையாடி வருவதாக தவறான கண்ணோட்டத்துடன் ஆரியை மற்ற போட்டியாளர்கள் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது

reshma

பலமுறை கமல்ஹாசன் ஆரியை பாராட்டி உள்ளதும் ஆரியை விமர்சனம் செய்தவர்களுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளதுமே இதற்குச் சான்றாக உள்ளது. இந்த நிலையில் ஆரி தான் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ரேஷ்மாவும் இதனை கூறியுள்ளார் 

தனது ஆதரவு எப்போதும் ஆரிக்குதான் இருப்பதாகவும் அவர் தான் டைட்டிலை வெல்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தை ஆரி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆரிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இப்பொழுதே குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web