ஆரி ஜெயிச்சா ஓகே, ஆரி ஜெயிக்க கூடாது: மாறி மாறி பேசிய பாலாஜி!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ஆரி ஜெயித்தால் கூட பரவாயில்லை ரியோ அல்லது சோம் ஜெயிக்க கூடாது என்று ஆஜித்திடம் பாலாஜி கூறுகிறார். அதே நேரத்தில் சில நிமிடங்கள் கழித்து ஷிவானியிடம் பேசுபோது யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் ஆனால் ஆரி மட்டும் டைட்டில் வின்னர் ஆகக்கூடாது என்றும், அவர் டைட்டில் வின்னர் ஆனால் வருத்தப்படும் முதல் நபர் நான் தான் என்று பாலாஜி கூறுகிறார். இவ்வாறு மாறி மாறி ஆரி குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக உள்ளது 

நேற்றைய எபிசோட் முடிவடையும் நிலையில் டைட்டில் வின்னர் குறித்து பாலா கூறியபோது ’நான் மட்டும் டைட்டில் வின்னர் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியே ஒரு புது ரெண்ட் ஆகி விடும் என்றும் இதுவரை கடலை சாப்பிட்டு வந்தவர்கள் மட்டுமே டைட்டில் வென்றுள்ளார்கள்’ என்றும் கடந்த  மூன்று சீசன்களின் டைட்டில் வின்னர்களை வம்புக்கு இழுத்தார் 

bala and aari

அதேபோல் ஆரி நல்லவர் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றும் அதே நேரத்தில் அவர் கெட்டவரும் இல்லை என்றும் அவருடைய விளையாட்டில் பல தந்திரங்கள் சூழ்ச்சிகள் இருப்பதாகவும் ஷிவானியிடம் பாலாஜி கூறுகிறார் 

மேலும் வேறு யார் வேண்டுமானாலும் இந்த டைட்டிலை வின்பண்ணினால் நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் ஆரி டைட்டில் வின் செய்தால் மட்டும் நான் வருத்தப்படுவேன் என்றும் இதை நான் கமல்ஹாசன் முன் கூட கூறுவேன் என்றும் பாலாஜி கூறியுள்ளது சர்ச்சைக்குரிய வகையில் இருந்தது

From around the web