ரம்யாவுக்கு மரண பயத்தை காட்டிய ஆரி ரசிகர்கள்: இனிமேலாவது சுதாரிப்பாரா?

 

ஒவ்வொரு வாரமும் ஆரியை எதிர்த்து சண்டை போட்டவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்., குறிப்பாக சம்யுக்தா, அர்ச்சனா, அனிதா ஆகியோர் நல்ல பிளேயர்களாக இருந்தாலும் ஆரியிடம் சண்டை போட்டதால் மட்டும்தான் வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கடந்த வாரம் ஆரியுடன் உடன் கருத்து வேறுபாடு கொண்ட ரம்யாவை வெளியேற்ற ஆரி ரசிகர்கள் தீவிர முயற்சி செய்தனர். இதனால் ரம்யா இந்த வாரம் வெளியேற்றப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ரம்யாவின் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது கூட இந்த வாரம் நீ வெளியேறினால் அதற்கு காரணம் நீ அல்ல என்று கூறியதும் இதனை மனதில் வைத்து தான்.

ramya

இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் ரம்யா கடைசி நேரத்தில்தான் காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எவிக்சன் பட்டியல் உள்ள ஐவரில் ஏற்கனவே மூன்று பேர் காப்பாற்றப்பட்டு கடைசியாக ஆஜித் மற்றும் ரம்யா இருப்பது போன்றும் அதில் ரம்யா காப்பாற்றப்பட்டது போன்றும் உள்ள காட்சிகள் இருப்பதை பார்க்கும் போது ஆரி இரசிகர்கள் ரம்யாவுக்கு மரண பயத்தை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது 

எனவே இனிமேலாவது ஆரியுடன் சண்டை சச்சரவு இல்லாமல் மீதமிருக்கும் இரண்டு வாரத்தைக் கழிப்பாரா? அல்லது ஆரியுடன் மீண்டும் சண்டை போட்டு அடுத்த வாரம் வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


 

From around the web