பாலாஜியுடன் மோதலை தவிர்த்த ஆரி: இதுவும் ஒரு ஸ்டேட்டர்ஜியா?

 

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஆரி மற்றும் பாலாஜி இடையே சண்டை சச்சரவு வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு வழியாக கமல்ஹாசன் இந்த பஞ்சாயத்தை கடந்த இரண்டு நாட்களில் தீர்த்து வைத்தார். இதனையடுத்து பாலாஜி தனது தவறை ஒப்புக் கொண்டது போல் தெரிகிறது.  

ஆரியிடமும் கமலஹாசனிடமும் மன்னிப்பு கேட்ட பாலாஜி இனிமேல் தான் கோபப்பட மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று எபிசோட் முடிந்தவுடன் ஹவுஸ் கீப்பிங் வேலைகளை செய்ய ஆரியுடன் யாரும் வரவில்லை. ஆரி தன்னந்தனியாகவே செய்தார்

aari

அப்போது ரியோ மற்றும் சோம் ஆகிய இருவரும் ’எங்களை கூப்பிட்டு இருக்கலாமே’ என்று கேட்டபோது ஆஜித் போய்விட்டான் என்பதால் பாலாஜிதான் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு வரவேண்டும் என்றும் ஆனால் பாலாஜி, நான் வேலை செய்வதை பார்த்துவிட்டும் வரவில்லை என்றும், கேட்டால் பிரச்சனை வரும் என்பதற்காகத்தான் நானாகவே முடித்து விட்டேன் என்றும் கூறுகிறார்

நானாகவே வேலை முடித்து விட்டேன் என விளம்பரப்படுத்த பக்கா ப்ளான் செய்து ஆரி குறை கூறுகிறாரா அல்லது பாலாஜியுடன் மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என்று தவிர்ப்பதற்காக அவராகவே வேலைபார்த்து விட்டாரா என்பது குறித்து நெட்டிசன்கள் இரண்டு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

மொத்தத்தில் நேற்றைய எபிசோடிலும் ஆரி தான் ஸ்கோர் செய்துவிட்டார் என்பதுதான் உண்மையாக உள்ளது

From around the web